செய்திகள் :

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

post image

சென்னை: 2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை(மே 21) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) – 2025, உதவிப் பொறியாளர் (அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி புதன்கிழமை (மே 21) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் 27.5.2025 முதல் 25.6.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தோ்வுக்கான கட்டணத்தை ‘யுபிஐ’ செயலி மூலம் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு 4.8.2025 முதல் 10.8.2025 வரை நடைபெறும்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தொடர்ச்சியாக 11-ஆவது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ஆம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1,236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025-2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

நாள்தோறும் ரூ.1000 சம்பளத்தில் உளவியல் ஆலோசகர் வேலை வேண்டுமா?

ஈரோடு மாவட்ட சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உளவியல் ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Counsellorகாலியிடம்: ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் 2964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 2,964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி... மேலும் பார்க்க

ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்ச... மேலும் பார்க்க

ரூ.63 ஆயிரம் சம்பவத்தில் டெக்னீஷியன் வேலை வேண்டுமா?

தேசிய அறிவியல் அருங் காட்சியகத்தில் காலியாகவுள்ள டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: 05/2025பணி: Technician 'A'காலியிடங்கள்: 13 (Fit... மேலும் பார்க்க

மிஸ் பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை உதவி மேலாளர் பணி!

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநில... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மே 16- இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : விழுப்ப... மேலும் பார்க்க