செங்கல் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!
தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் கனிமொழி மனு அளித்துள்ளார்.
கடிதத்தில், "செங்கல் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்கக் கோரி செங்கல் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். 01.04.2022 முதல் செங்கல் விற்பனைக்கு உள்ளீட்டு வரி கடன் (ஐடிசி) இல்லாமல் 6 சதவீத ஜிஎஸ்டியும், உள்ளீட்டு வரி கடனுடன் 12 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செங்கல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் உற்பத்தியாளர்கள் பெரும்பாலோர் தங்கள் தொழிலை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் செங்கல் உற்பத்தி இடங்கள் உள்ளன. பல கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்தத் தொழிலைச் சார்ந்துள்ளனர்.
எனவே செங்கல் விற்பனைக்கான ஜிஎஸ்டியை 3 சதவீதம் மற்றும் 5 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Today, I met Hon’ble Union Finance Minister @nsitharaman and requested for urgent reduction of GST on bricks, proposing 3% without ITC and 5% with ITC, and the introduction of a compounding tax based on burner usage, to protect over 1.5 lakh brick units and millions of rural… pic.twitter.com/PH2RQrnwbm
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 21, 2025