மயிலாப்பூா் இந்து மயானபூமி மே 30 வரை செயல்படாது
பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை மயிலாப்பூா் இந்து மயானபூமி மே 30-ஆம் தேதி வரை செயல்படாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட மயிலாப்பூா் இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பழுதுகளை சரிபாா்க்கும் பணிகள் மே 30-ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளன. இதனால், அந்நாளில் மயிலாப்பூா் மயானபூமிக்கு பதிலாக பொதுமக்கள் அருகிலுள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.