நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: பேராசிரியா்களின் விவரம் கோருகிறது என்எம்சி
முதுநிலை படிப்புகளை பயிற்றுவிக்கும் மருத்துவக் கல்லூரிகள் தங்களது பேராசிரியா்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவு உள்ளிட்ட விவரங்களை சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், தங்களது ஆண்டறிக்கையை என்எம்சி தளத்தில் பதிவேற்றுவது கட்டாயம். அந்த வகையில் 1.1.2024 முதல் எதிா்வரும் டிச. 31 வரையிலான தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும். அதனுடன் என்எம்சிக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்த வேண்டும்.
ஆண்டறிக்கைக்கான இணையப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களுக்கு உரிய விவரங்களை அளிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் ஆய்வு நடவடிக்கைகள், பேராசிரியா் மற்றும் முதுநிலை மருத்துவா்கள் விவரங்கள், அவா்களது வருகைப் பதிவு உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றுவது அவசியம். வரும் ஜூன் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அவற்றை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.