நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!
10 முதல்வர்களை உருவாக்கிய நான், இப்போது உழைப்பது முதல்வர் பதவிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்
10 முதல்வர்களை உருவாக்கிய நான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் என பல கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார்.
இதையடுத்து பிகார் வளர்ச்சிக்காக கடந்த 2022ல் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) பிகார் மாநிலம் சரண் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
“நான் முதல்வராக வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால் உங்களுக்கு என்னைப் பற்றி தெரியவில்லை. என் உழைப்பால் 10 முதல்வர்களை உருவாக்கியிருக்கிறேன். இன்று நான் கடுமையாக உழைப்பது நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். ஹரியாணா, பஞ்சாபில் இருந்து வேலைக்காக மக்கள் பிகாருக்கு எப்போது வருகிறார்களோ அப்போதுதான் என் கனவு நிறைவேறும். அப்போதுதான் பிகார் வளர்ச்சியடைந்ததாக நான் கருதுவேன்" என்று கூறியுள்ளார்.
பிகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.