நம்பினால் நம்புங்கள்! பாம்பு கடித்து 58 முறை இறந்த 2 பேர்: இது மத்திய பிரதேச முற...
கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களும் அதற்கான தலைவா்களும் அறிவிக்கப்பட்டனர்.
கனிமொழி தலைமையில் குழு
தமிழக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழியை ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்படவுள்ளது. அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
தொடர்ந்து, ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கெனவே, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.