செய்திகள் :

Soori: 'யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்துக்காதீங்க...' - ரசிகர்கள் குறித்து சூரி

post image

‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மாமன்’.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார்.

தவிர ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மே 16 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.

படத்தின் வரவேற்பு குறித்து தொடர்ந்து சூரி செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.

‘மாமன்' படம்
‘மாமன்' படம்

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சூரி, “எனக்கு நேரம் கிடைக்கும்போது கதைகளை எழுதி வருகிறேன். சினிமா பயணம் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.

ரசிகர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. ரசிகர்கள், முதலில் தங்கள் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுதல் என்ற பேரில் யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது” என்றிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ நான் நடித்த எல்லா படங்களும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயங்களைக் கற்றுத்தந்திருக்கிறது. அதில் மறக்கமுடியாத படம் என்றால்  ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தைச் சொல்வேன்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

அந்தப் படத்தில் இருந்துதான் என் வாழ்க்கை தொடங்கியது. அதன் பிறகு நிறைய இயக்குநர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்து இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

"இடையூறுக்கு மன்னிக்கவும்" - தள்ளிப்போகும் 'படைத்தலைவன்' - சண்முக பாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள ‘படைத்தலைவன்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.நாளை... மேலும் பார்க்க

Simran: ``அந்த நடிகை மன்னிப்புக் கேட்டார்'' - `டப்பா ரோல்' விவகாரம் குறித்து சிம்ரன்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" - சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது திரைப்பட தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்திருப்பதாக இன்று காலை செய்தி வெளியானது. 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்திற்கு இசையமைக்க பணத்தைப் பெற்றுக் கொண்டு சா... மேலும் பார்க்க