செய்திகள் :

"இடையூறுக்கு மன்னிக்கவும்" - தள்ளிப்போகும் 'படைத்தலைவன்' - சண்முக பாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

post image

அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள ‘படைத்தலைவன்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

நாளை (மே 23) ‘படைத்தலைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனை சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

படைத்தலைவன் படத்தில்...
படைத்தலைவன் படத்தில்...

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், படைத்தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Thug Life: "'மருதநாயகம்' திரைப்படம் வந்திருந்தால், இந்நேரம்..." - கேரளத்தில் கமல் ஹாசன்

'தக் லைஃப்' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றி வருகிறார். பல இடங்களில் 'தக் லைஃப்' குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.Thug Life Stills ... மேலும் பார்க்க

‘என் பையனை வளர்த்துவிடுங்க' - விஜய் உயர்வுக்காக உழைத்த SAC - நெகிழ்ந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

டிஆர்.பாலா இயக்கத்தில், 'பிக் பாஸ்' வெற்றியாளர் முகேன் ராவ் மற்றும் 'ஜோ' திரைப்பட புகழ் பாவ்யா திரிகா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'ஜின்’. பால சரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, ... மேலும் பார்க்க

Soori: 'யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்துக்காதீங்க...' - ரசிகர்கள் குறித்து சூரி

‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மாமன்’.இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார்.தவிர ராஜ்கிரண், ஸ்வ... மேலும் பார்க்க