செய்திகள் :

நம்பினால் நம்புங்கள்! பாம்பு கடித்து 58 முறை இறந்த 2 பேர்: இது மத்திய பிரதேச முறைகேடு!!

post image

போபால்: பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தில் பல கோடி ரூபாய் அரசுப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதும், இதற்காக இரண்டு பேர் 58 முறை பாம்பு கடித்து இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டம் - தி ஜங்கிள் புக்கில் வரும் கா பாம்பின் நிலம் என்று அழைக்கப்படுவது - கோடிக்கணக்கான அரசுப் பணத்தை முறைகேடு செய்வதற்காக நடத்தப்பட்ட மோசடியில், ஒரு ஆண் 30 முறையும், ஒரு பெண் 29 முறை பாம்பு கடித்து 'இறந்துள்ளனர்'.

அதாவது, கிராமப் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்களில் பலியாகும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் மாநில அரசின் திட்டத்தின் மூலம், போலியாக இழப்பீடு கோருவதற்காக, அதிகாரப்பூர்வ பதிவுகளில் பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்னல் பாய்ந்து இறந்ததாகப் போலியாகக் கணக்குக் காட்டி சுமார் ரூ.11.26 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சியோனி மாவட்டத்தின் கியோலாரி தாலுகாவின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து, ஜபல்பூர் நிதித்துறை நடத்திய விரிவான விசாரணையில்தான் போலியான இறப்புகளைக் காட்டி ரூ.11.26 கோடி அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியிருக்கிறது.

அது மட்டுமல்ல, மோசடி செய்யப்பட்ட தொகையானது 47 பேரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திய குழுவுக்கு தலைமை தாங்கிய நிதித் துறை இணை இயக்குநர் ரோஹித் கௌஷல் தெரிவித்துள்ளார்.

இந்த ஒட்டுமொத்த மோசடி மற்றும் முறைகேடுக்கும் மூளையாக செயல்பட்டிருப்பது கியோலாரி தாலுகா அலுவலக உதவியாளர் சச்சின் தஹாயக் என்பதும், இவர்தான், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், பினாமிகளின் வங்கிக் கணக்கில் மோசடி செய்த பணத்தை செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணம், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படாமல், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரில் வேண்டுமென்றே ஏவப்பட்டதா பிரம்மோஸ்? எலி போல பாகிஸ்தான்!

மே 6-7ஆம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்திய ராணுவம், பாகிஸ்தான... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? போர் நிபுணர் அளித்திருக்கும் மாஸ் விளக்கம்!

புது தில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக, போர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் எப்போதெல்லாம் சண்டை?

ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தானிய படைகளும் பயங்கரவாதிகளும் ஆக்கிரமித்தபோது 1999ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகக் கடுமையான கார்கில் போர் உண்டானது.இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ப... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கல்: பழவம்-16ல் புதிய மாற்றம்! ஏன் தெரியுமா?

2025-26ஆம் நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதமே வந்துவிட்டது. வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்குத்தாக்கலுக்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருவார்கள்.கடந்த 2024 - 25ஆம் நித... மேலும் பார்க்க

காலில் சாதாரண செருப்பு.. தள்ளாடியபடி வந்த பீமவ்வா! இவருக்காக நெறிமுறையை மீறிய முர்மு!

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில் வாழ்ந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பீமவ்வா தொட்டபலப்பா ஷில்லேக்யதாரா (96) நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.ஒட்டு ... மேலும் பார்க்க

டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

அமெரிக்காவின் 47ஆவது அதிபராகவும் இரண்டாவது முறையாகவும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று, 100 நாள்கள் நிறைவடைந்த நிலையில், 100 நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை மிக்சிகன் மாகாணத்தில் டிரம்ப் நடத்தினார். இந்த நிகழ்... மேலும் பார்க்க