செய்திகள் :

நாயகன் படப்பிடிப்பு மும்பையில் எவ்வளவு நாள்கள் நடைபெற்றது தெரியுமா?

post image

நடிகர் கமல்ஹாசன் நாயகன் திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புரமோஷனுக்கான நேர்காணலின்போது நாயகன் படம் குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, கமல்ஹாசன், “நாயகன் படத்தின் 2-வது நாள் படப்பிடிப்பிலேயே இப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமையும் எனத் தெரிந்துவிட்டது. சரியான திட்டமிடல் இருந்ததால் ஒவ்வொருவரும் ஒரு வேலையைச் செய்தோம். நான் நடிப்பதையும் தாண்டி பெண் ஒருவருக்கு வயதான தோற்றத்திற்காக மேக்கப் போட்டுவிடுவேன்.

தினமும் அவர் என் அலுவலகம் வருவார். அவருக்கு மேக்கப் போட்டுவிட்டபின் நானும் போட்டுக்கொள்வேன். பட்ஜெட்டும் அதிகம் இல்லாததால் மும்பையில் நாயகன் படப்பிடிப்பை மொத்தமாகவே 4 நாள்கள்தான் நடத்தினோம். தேவைப்பட்ட நாள்களைவிட குறைவாக இருந்தாலும் அனைத்து துறையினரும் கடுமையான உழைப்பைக் கொடுத்ததால் அது சாத்தியமானது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: கேன்ஸ் விழாவில் குங்கும திலகமிட்டு வந்த ஐஸ்வர்யா ராய்! ஏன்?

ஒத்திகை செய்யாமல் படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டேன்: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு படத்திற்கு நடிப்பு ஒத்திகை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம... மேலும் பார்க்க

500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.சிங்கப் பெண்ணெ தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாள்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டி... மேலும் பார்க்க

படை தலைவன் வெளியீட்டில் மாற்றம்!

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜகந... மேலும் பார்க்க

ஹார்ட் பீட் - 2 வெப் தொடர் வெளியானது!

ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகத்தின் முதல் 4 எபிசோடுகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நிலையில் இரண்டா... மேலும் பார்க்க

இலங்கையில் மதராஸி படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நாயகனாகும் பிரபல தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழில் நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானர் கேஜே ராஜேஷ். கேஜேஆர் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தவர் ஹீரோ, டா... மேலும் பார்க்க