இலங்கையில் மதராஸி படப்பிடிப்பு!
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக செப். 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் படமாக்க படக்குழு இலங்கை சென்றுள்ளது. படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், ருக்மணி வசந்த் ஆகியோர் உள்ளனர்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று முடிந்த நிலையில் மதராஸி படமும் அங்கு படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாயகன் படப்பிடிப்பு மும்பையில் எத்தனை நாள்கள் நடைபெற்றது தெரியுமா?