செய்திகள் :

Tasmac : `அனைத்து வரம்புகளையும் மீறி விட்டீர்கள்’ - அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

post image

ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, அதன் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதுடன், அதன் மூத்த அதிகாரிகள் பலரையும் விசாரித்தது மேலும் செல்போன் லேப்டாப் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் பறிமுதல் செய்தது.

அமலாக்கதுறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

டாஸ்மாக்

அரசு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

மேலும் எதுவாக இருந்தாலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக மீண்டும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி மீண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது!

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக 41 வழக்குகளை தாக்கல் செய்து உள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு தான் இந்த விவகாரத்தில் தலையை நுழைத்த அமலாக்கத்துறை அதன் தலைமை அலுவலகம் வரை சோதனை நடத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் தரவுகளையும் நகலெடுத்துள்ளது என வாதங்களை முன் வைத்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது பேசிய தலைமை நீதிபதி, ``அமலாக்கத்துறை இத்தகைய முறைகேடு விவகாரங்களில் தனிநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் ஒரு நிறுவனத்திற்கு எதிராக எப்படி அதைச் செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி இருக்கிறது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `இதில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக’ தெரிவித்தார்.

அமலாக்கத்துறை...

``இது போன்ற விஷயங்கள் எதையும் தற்போது தெரிவிக்காதீர்கள். இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையான குற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் அபன்ஸ் எங்கே நடந்திருக்கிறது? இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது” என மீண்டும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியதுடன், `இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும் தடை’ விதித்து உத்தரவிட்டதுடன் அமலாக்கத்துறையினருக்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்தார். மேலும் உச்ச நீதிமன்ற கோடை விடுமுறை முடிந்ததற்கு பிறகு இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்து வழக்கினை ஒத்தி வைத்தார்.

மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக... மேலும் பார்க்க

``சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதிபதிக்கான தேர்வுகள் எழுத மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.``2002 ஆம் ஆண்டு உத்தரவுக்குப் பிறகு, புதிய சட்டப் பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லா... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

பாலியல் வன்கொடுமை என்பதே கொடூரம்தான். கொடூரத்திலும் கொடூரம்... பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தற்போது இந்த வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்த... மேலும் பார்க்க

"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வி... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை : `கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ - உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி... மேலும் பார்க்க

`ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக பதவி ஏற்கும் ... மேலும் பார்க்க