செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை : `கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ - உச்ச நீதிமன்றம்

post image

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இந்த மனுவும் பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த விவகாரத்தில் இரண்டு மாநில அரசுகளும் தனித்தனியாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

அப்போது பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள ஏதுவாக ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கேரளா அரசு தரப்பு வழக்கறிஞர், `முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக உள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க தமிழ்நாடு அரசு தவறி வருகிறது’ என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ``மரங்களை வெட்ட கேரளா முன்பு அனுமதி அளித்தது. தற்போது மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி கோர வேண்டும் என்று கேரளா கூறுகிறது” எனக் கூறினார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், `இந்த நீதிமன்றத்தில் அரசியல் ரீதியிலான உங்களது வாதங்களை முன்வைக்காதீர்கள்’ என கேட்டுக்கொண்டனர்

தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், `முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு அளித்த விண்ணப்பத்தின் மீது நான்கு வார காலத்திற்குள் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். அதேபோல கேரளா அரசு உடனடியாக முடிவை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும் முல்லைப் பெரியாறு அணை வல்லக்கடவு காட்டுச் சாலையில் கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பணியின் போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியினை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டனர்.

முல்லை பெரியாறு அணை

மேலும் ``முல்லைப் பெரியாறு அணை மதகுகளை சீரமைப்பது மற்றும் மராமத்து பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றிற்கு ஏதுவாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செல்ல இரண்டாவது படகை தமிழ்நாடு அரசுக்கு கேரளா வழங்க வேண்டும் என்றும் வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் அதை முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு உடனடியாக கூடி முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வி... மேலும் பார்க்க

`ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக பதவி ஏற்கும் ... மேலும் பார்க்க

Sofiya Qureshi: `உங்க முதலை கண்ணீரை நம்ப தயாராக இல்லை’ - பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

`பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய சகோதரியை வைத்து பதில் சொல்லி இருக்கிறோம்’ என ராணுவ அதிகாரி சோபியா குரேஷியாவை மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மிக மோசமான முறையில் பேசி இருந்தார். ராணுவ அதி... மேலும் பார்க்க

NEET: `கரண்ட் கட் ஆனதால் பாதிப்பு' - மாணவி வழக்கு; ரிசல்ட் வெளியிட தடை விதித்த உயர்நீதிமன்றம்!

`நீட் தேர்வின் போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவியொருவர் அளித்த புகாரை விசாரித்த மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு, 2024 நீட்-யுஜி தேர்வு முட... மேலும் பார்க்க

மா.சு மீதான வழக்கு: `விசாரணைக்கு ஒப்புதலை யாரிடம் பெறவேண்டும்?' - உச்ச நீதிமன்றத்தில் எழுந்த கேள்வி

மா. சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்ததாகச் சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கு அவரை விசாரிப்பதற்கான ஒப்புதலை அரசிடம் பெற வேண்டுமா? அல்லது சபாநாயகர் இடம் பெற வேண்டுமா? என்ற முக்கிய கேள்வியை உச்ச நீ... மேலும் பார்க்க

`கணவரின் திருமணம் மீறிய உறவு; மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது’- டெல்லி நீதிமன்றம்

கடந்த ஆண்டு டெல்லியில் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் குடும்பத்தினர் கொடுத்த புகாரில், 'எங்கள் பெண்ணின் கணவருக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் திர... மேலும் பார்க்க