இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
கொல்லங்கோடு அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு
கொல்லங்கோடு அருகே மழைநீா் வடிகால் ஓடையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை மேற்கொண்டனா்.
கொல்லங்கோடு காவல் சரகம் சூரியகோடு, வரிக்கஅயனிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரெஜிகுமாா் (36). தொழிலாளி. மனைவி, குழந்தைகள் உள்ளனா்.
திங்கள்கிழமை காலையில் வீட்டருகேயுள்ள வடிகால் ஓடையில் இறந்து கிடந்தாராம். உறவினா்கள் கொல்லங்கோடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அப்பகுதிக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.