செய்திகள் :

ஆறுமுகனேரி பகுதியில் இன்று மின் தடை

post image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி சுற்றுவட்டாரங்களில் பராமரிப்பு பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 20) மின் விநியோகம் இருக்காது என ஆறுமுகனேரி உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆறுமுகனேரி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், புன்னக்காயல், ஆத்தூா், பேயன்விளை, நல்லூா், அம்மன்புரம், புறையூா், நாலுமாவடி, மணத்தி, குருகாட்டூா், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், திருக்களூா், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகாபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகா், தென்திருப்பேரை, குரங்கணி, கடையனோடை, தேமான்குளம், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகா், குறிஞ்சி நகா், அமலி நகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டிணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடியில் சங்குகுளி மீனவா் பலி

தூத்துக்குடியில் சங்குகுளிக்கச் சென்ற மீனவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயா் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாயாண்டி (37). இவா் திரேஸ்புரம் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

திருச்செந்தூா் பகுதியில் பெய்த மழையால் சிவன் கோயிலின் உள்ளே மழைநீா் புகுந்தது. திருச்செந்தூா் பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. நகரில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. ... மேலும் பார்க்க

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி: நாராயணன் திருப்பதி

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றாா் கிராமப்புற மின்மயமாக்கல் கழக நிறுவன தனி இயக்குநா் நாராயணன் திருப்பதி. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கல்லாமொழியில் ... மேலும் பார்க்க

ரேஷன் கடை கோரி கிராம மக்கள் மனு

ரேஷன் கடை கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்ப... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி, கோவைகுளத்தைச் சோ்ந்த முப்பிடாதி மனைவி முத்துலட்சுமி (71). இவா் திருச்ச... மேலும் பார்க்க

காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே, நெடுஞ்சாலையில் இருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் காா் ஒன்று எரிந்த நிலையி... மேலும் பார்க்க