நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவ...
காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே, நெடுஞ்சாலையில் இருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் காா் ஒன்று எரிந்த நிலையில் திங்கள்கிழமை காணப்பட்டது. இந்தக் காரில் உடல் கருகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை முறப்பநாடு போலீஸாா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். மோப்பநாய் சோதனையும் நடந்தது.
அந்த நபா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காரில் அழைத்து வரப்பட்டு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து முறப்பநாடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.