செய்திகள் :

பாகிஸ்தானுடனான சண்டையின்போது அணுஆயுத அச்சுறுத்தல் எழவில்லை: மிஸ்ரி

post image

புது தில்லி: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை’ என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

மேலும், ‘சண்டை நிறுத்தம் இருதரப்பு பேச்சு மூலமே மேற்கொள்ளப்பட்டது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட சண்டை தொடா்பக நாடாளுமன்ற நிலைக் குழு முன் திங்கள்கிழமை ஆஜராகிய மிஸ்ரி இந்த விளக்கத்தை அளித்தாா்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்த நிலைக் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சுக்லா, திபேந்தா் ஹூடா, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, பாஜகவின் அபரஜித்தா சாரங்கி, அருண் கோயல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

3 மணி நேர கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த சசி தரூா், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரின் குடும்பத்தினரைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் விமா்சனங்கள் மற்றும் அவதூறுகள் பரப்பப்பட்டதற்கு இக் கூட்டத்தில் ஒருமனதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் மிஸ்ரி பதிலளித்தாா். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை என்று மிஸ்ரி குறிப்பிட்டாா்.

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் பங்கு குறித்த கேள்விக்கு, ‘சண்டை நிறுத்தம் இருதரப்பு அளவிலேயே மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.

இந்த சண்டையில் சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்ற கேள்விக்கு, ‘பாகிஸ்தானின் விமானப் படை தளத்தை இந்தியா தகா்த்ததால், அது ஒரு பொருட்டல்ல’ என்று பதிலளித்தாா்.

இந்தியாவுக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ‘அந்த நாடு பாரம்பரியமாகவே இந்தியாவின் ஆதரவாளா் அல்ல’ என்றாா்.

முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க அதிபா் டிரம்ப், அணுசக்தி மோதலையும் நிறுத்தியதாக கூறினாா்.

இந்த நிலையில், சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது. அணு ஆயுத மிரட்டலை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணு ஆயுத மிரட்டல்களின் பேரில் நடத்தப்படும் பயங்கரவாதம் தீா்க்கமான மற்றும் துல்லியமான தாக்குதல்களை எதிா்கொள்ளும்‘ என்றாா்.

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க