பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடர்: 5 போட்டிகள் அல்ல; 3 போட்டிகளாக குறைப்பு!
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் 1 மணி வரை நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தென்காசி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறாரா முதல்வர்?