வெடித்த வன்கொடுமை விவகாரம்; தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உ...
வங்கக் கடலில் நிலநடுக்கம்...!
வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கக் கடல் பகுதியில், கடலுக்கடியில் இன்று (மே 20) மாலை 3.15 மணியளவில், 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆழம் குறைந்த நிலநடுக்கமாக இது இருப்பதினால் பின் அதிர்வுகள் ஏதேனும் ஏற்படுமா என அஞ்சப்படுகிறது.
EQ of M: 4.4, On: 20/05/2025 15:15:53 IST, Lat: 17.06 N, Long: 89.62 E, Depth: 10 Km, Location: Bay of Bengal. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs…@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/76cP2fGljn
— National Center for Seismology (@NCS_Earthquake) May 20, 2025
இருப்பினும், இதனால் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதற்கான செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, நேற்று (மே 19) மியான்மர் நாட்டுக்கு அருகிலுள்ள வங்கக் கடல் பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாளத்தில் நிலநடுக்கம்! ஒரே ரிக்டரில் தொடரும் அதிர்வுகள்?