அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்: என்எம்சி எச்சரிக்கை
Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' - விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் அன்பளிப்பாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, ``நட்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் இது போன்ற அன்பளிப்பெல்லாம் ஒரு சாதாரண விஷயம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் இரு நாடுகளிலும் பேசுபொருளானது. இது குறித்து விளக்கமளித்த ட்ரம்ப், ``இப்படிப்பட்ட பரிசை முட்டாள் தான் நிராகரிப்பான். இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகிறது" என்றார்.
இந்த விமானம் வழங்கப்படுவதன் மூலம் கத்தார் அமெரிக்காவுக்கு லஞ்சம் கொடுக்கிறது... அமெரிக்காவிடம் செல்வாக்கு பெற முயற்சிக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது.
இதற்கு விளக்கமளித்திருக்கும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, ``மக்கள் ஏன் ஒருவருக்கு கொடுக்கும் பரிசை லஞ்சமாகவோ அல்லது ட்ரம்ப் நிர்வாகத்துடன் கத்தார் செல்வாக்கை செலுத்துவதற்கான ஒரு வழியாகவோ கருதினர் என்பது தெரியவில்லை.
ஆனால் அமெரிக்காவில் உள்ள மக்களும் அங்குள்ள அரசியல்வாதிகளும்கூட, கத்தாரை ஒரு நண்பராக, நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறார்கள். தேவைப்படும் போதெல்லாம் நாமும் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.