செய்திகள் :

தமிழகத்தில் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

post image

தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு பெற்றவையாக உள்ளதாகவும், பதிவு உரிமம் பெறாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம்பெறுவது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும்.

இதற்காக 2018-இல் தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மட்டுமன்றி, சித்தா ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த காலகட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதாகத் தெரிகிறது.

இதனால், இதுவரை 38,188 மருத்துவமனைகள் மட்டுமே, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தில் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன.

இதையடுத்து பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விண்ணப்பிக்காத மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அதனையும் பொருட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க