செய்திகள் :

யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தாரா? - விசாரணையில் சொல்லப்படுவதென்ன?

post image

பாகிஸ்தானின் முதன்மை உளவு அமைப்பான ISI-க்கு உளவு பார்த்ததாக 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் ஒருவர்.

ஜோதி மல்ஹோத்ரா

தற்போது 5 நாள்கள் காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் மல்ஹோத்ராவிடம், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), புலனாய்வுப் பிரிவு (IB) மற்றும் ஹரியானா காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு குழு விசாரணையில் ஹரியானாவைச் சேர்ந்த இவர், இந்திய ரகசிய ஏஜெண்ட்கள் பற்றி தகவல்களைப் பகிர்ந்ததாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. அந்த விசாணையில் வெளியான தகவல்கள் என மேலும் சில தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

மல்ஹோத்ரா மற்றும் ஐ.எஸ்.ஐ-யைச் சேர்ந்த அலி ஹசன் இடையிலான வாட்ஸஅப் தொடர்புகளை ஆராய்ந்ததில், இந்தியாவின் இரகசிய நடவடிக்கைகள் தொடர்பான குறியீட்டு (Coded) உரையாடல்களைக் கண்டறிந்திருப்பதாகவும்,

ஒரு செய்தியில் 'அட்டாரி எல்லைக்கு வந்தபோது ரகசிய ஏஜென்ட்டுக்கு ஏதாவது சிறப்பு நெறிமுறைகள் வழங்கப்பட்டதை கவனித்தீர்களா?' என ஹசன், மல்ஹோத்ராவிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த உரையாடலில் "நெறிமுறை" மற்றும் "ரகசிய முகவர்" போன்ற சொற்கள் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தப்படுவது, இந்திய அதிகாரிகளின் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

ISI
ISI

மல்ஹோத்ரா தெரிந்தே இந்திய ரகசிய ஏஜென்ட்களை காட்டிக்கொடுக்க செயல்பட்டாரா அல்லது ஐ.எஸ்.ஐ-யின் பரந்த வலைப்பின்னலின் ஒரு பகுதியாக மேனிபுலேட் செய்யப்பட்டு ஆட்டி வைக்கப்பட்டாரா என்பதை உறுதிபடுத்தும் நோக்கில் விசாரணை நடந்து வருகிறது

மல்ஹோத்ரா 2023-ம் ஆண்டு சீக்கியர்களின் விழாவான வைசாகி திருவிழாவைக் காண முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Trump: `கோல்டன் டோம்' `விண்வெளியில் இருந்து தாக்கினால்கூட...'- ட்ரம்ப் அறிவித்த புதிய ராணுவ தளவாடம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தில், 'கோல்டன் டோம்' என்கிற அதிநவீன ராணுவ தளவாடம் ஒன்றைச் சேர்க்கவுள்ளார். இதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 175 பில்லியன் டாலர். ஆரம்பகட்டமாக, இந்தத் தளவாடத்திற்கு ... மேலும் பார்க்க

M.K.Stalin: `இது கட்சி நிகழ்ச்சி இல்லப்பா' டு முன்னரே குளித்த யானைகள் வரை - ஊட்டி பயண நிகழ்வுகள்

மே - 12 பிற்பகல்: தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க தமிழக விருந்தினர் மாளிகைக்குக் காங்கிரஸ் நிர்வாகிகள் மூவருடன் வந்த ஊட்டி எம்.எல்.ஏ கணேசனை காவல் துறையினர் அனுமதிக்க மறுக்கவே, ஒருவழியாக எம்.எல்.ஏ., மட... மேலும் பார்க்க

வெடித்த வன்கொடுமை விவகாரம்; தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி ... மேலும் பார்க்க

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' - விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க