செய்திகள் :

Preity Zinta: `நான் ராஜஸ்தான் அணி இளம் வீரரை கட்டிப்பிடித்தேனா?' - ஆத்திரமான நடிகை பிரீத்தி ஜிந்தா

post image

இந்தியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டப் படம் 'உயிரே'. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் பிரீத்தி ஜிந்தா.

இந்த ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகையாகி, தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து பிரபலமாக மாறினார். இமாச்சலின் ஷிம்லாவைச் சேர்ந்த பிரீத்தி ஜிந்தா பிலிம்பேர், சர்வதேச இந்திய திரைப்பட விருது, சிகாகோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.

பிரீத்தி ஜிந்தா
பிரீத்தி ஜிந்தா

நடிப்பு மட்டுமின்றி சமூக ஆர்வலராகவும், தொழிலதிபராகவும் உருவெடுத்த பிரீத்தி ஜிந்தா, கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராக மாறினார்.

தனது அணி விளையாடும் போட்டியில் தவறாமல் கலந்துகொண்டு, அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கடந்த 18-ம் தேதி பஞ்சாப் - ராஜ்ஸ்தான் அணி மோதிக்கொண்டது. இதில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்த மேட்சை பார்ப்பதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா சென்றிருக்கிறார்.

போட்டி முடிந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூரியவன்ஷியும் பிரீத்தி ஜிந்தாவும் கட்டிப்பிடிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோக்களை சில செய்தி சேனல்களும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் வலம் வந்தன.

நடிகை பிரீத்தி ஜிந்தா
நடிகை பிரீத்தி ஜிந்தா

இந்த நிலையில், நடிகை பிரீத்தி ஜிந்தா தன் எக்ஸ் பக்கத்தில், ``இது ஒரு மார்பிங் செய்யப்பட்ட படம், போலி செய்தி. இப்போது செய்தி சேனல்களும் மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பயன்படுத்தி அவற்றை செய்திகளாகக் காட்டுகின்றன என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!" எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உண்மையான வீடியோவை வெளியிட்டது. அதில் இருவரும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் மட்டுமே இருக்கிறது.

CSK: 'பதிரனா எங்களோட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யல!' - ப்ளெம்மிங் அதிருப்தி

'சென்னை தோல்வி!'ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் சில முக்கியமான விஷய... மேலும் பார்க்க

CSK vs RR: தோனி செய்த 3 தவறுகள்; தோல்வியுற்ற CSK - விரிவான அலசல்

'சென்னை தோல்வி!'ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில முடிவுகளுமே முக்கிய காரணமாக இருந்தத... மேலும் பார்க்க

Dhoni : 'பெருமைக்காக ஆடி எந்தப் பலனும் இல்லை' - டாஸில் தோனி பளிச் பேச்சு

'சென்னை vs ராஜஸ்தான்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் வென்றிருந்தார். மு... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: 'நான் அழவே இல்ல, என்ன நடந்ததுன்னா' - விளக்கும் வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார். லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் ... மேலும் பார்க்க

Dhoni : 'I Don't Know' - தோனியின் எதிர்காலம் குறித்து ப்ளெம்மிங்கின் 'நறுக்' பதில்

'ப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ள... மேலும் பார்க்க

LSG vs SRH: `தொடரின் தொடக்கத்தில் நன்றாகத்தான் விளையாடினோம், ஆனால்..' -தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னோ அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ அணி தோல்வியுற்று பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய லக்... மேலும் பார்க்க