கால் வளைந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் 6 மணி நேர அறுவை சிகிச்சை
'சரியான வழிகாட்டுதலுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும்'- கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி சத்யஶ்ரீ பூமிநாதன்
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து நாமக்கலில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மே 24 ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் Dr. உமா, நாமக்கல் மாவட்ட எஸ்.பி IAS, திரு. ராஜேஷ் கண்ணன் IPS, திரு. CA.N.V நடராஜன் (நிறுவனர் மற்றும் தலைவர் பாவை கல்வி நிறுவனங்கள்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சி குறித்து பேசும் அவர் "சரியான வழிகாட்டுதலுடன் திட்டமிட்டு படித்தால் முதல் முயற்சியிலேயே மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த UPSC போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் எந்த ஒரு பின்புலமும் இல்லாத கிராமப்புறங்களில் இருந்து வந்த முதல் பட்டதாரி மாணவர்கள், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடப்பு ஆண்டு UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானதில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் கவின்மொழி (IPS) மற்றும் நிலா பாரதி (IFS) ஆகிய இருவரும் ஒரே ஆண்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வரலாற்றில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக 100% பார்வையற்ற திருமதி. Beno zephaine IFS அதிகாரியை உருவாக்கிய பெருமைமிக்க கோச்சிங் சென்டர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி.
UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலைப் பாடத்தையோ, அறிவியல் பாடத்தையோ, பொறியியல் பாடத்தையோ பட்டப்படிப்பாக எடுத்து படிக்கலாம். குறிப்பிட்ட பாடத்திட்டம் தான் படிக்க வேண்டும் என்ற எந்த வித கட்டாயமும் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது தேர்ச்சி பெறுவதை எளிதாக்கும்.

தற்போது +2 முடித்த மாணவர்கள் கூட கல்லூரியில் சரியான திட்டமிடல் மூலம் முதல் முயற்சியிலேயே UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். கல்லூரியில் ஆப்ஷனல் படிப்பை தேர்வு செய்து படிக்கும் அதே வேளையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்க கூடிய மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த படிப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
NCERT பாடத்திட்டத்தின் அனைத்து பாடங்களையும் முழுமையாகப் படிப்பதன் மூலமும் தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பதைக் கட்டாயப்படுத்திக் கொள்வதன் மூலமும் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற முடியும். தினமும் நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைக் கூர்ந்து கவனிப்பது அதை அலசி ஆராயக் கூடிய திறனை வளர்த்துக்கொள்வது இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான முதன்மையான பண்புகளாகும்.
முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வானது சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த நிலை தேர்வான முதன்மைத் தேர்வை (Main Exam) எழுத முடியும். விடைகளை விவரித்து எழுதும் இந்தத் தேர்வு முறை சென்னையில் நடத்தப்படும். மூன்றாவதாக நிலையான நேர்முகத் தேர்வு (Interview) மட்டும் டெல்லியில் நடைபெறும்.
தற்போதைய TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கு இணையாக UPSC தேர்வுகளின் பாடத்திட்டங்கள், அறிவிப்பு, முடிவுகள் வெளியீடு குறித்த அனைத்துத் தகவல்களும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.
UPSC தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற வசதியாக கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் கிளைகள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் குறைவான கட்டணத்தில் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திப் பலன் பெறலாம்" என்றார்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.