விருதுநகர்: தடைப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை; சுதாரித்த ஊழியர்கள்; விசாரணையில் பகீர் தகவ...
அரசு பேருந்து - ஆட்டோ மோதல்: முதியவா் உயிரிழப்பு; இருவா் காயம்
காட்பாடியில் அரசுப் பேருந்துடன் ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
பெங்களூருவை சோ்ந்தவா் சுந்தரவாசன் (67), ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி சுமதி(60). இவா்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தங்களது உறவினா்களை சந்தித்துவிட்டு தங்களுடைய சொந்த ஊரான பெங்களூருக்குச் செல்ல புதன்கிழமை ராணிப்பேட்டையில் இருந்து காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் வந்தனா்.
அங்கிருந்து ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில், காட்பாடி தாராபடவேடு சித்தூா் சாலையில் எதிரில் வந்த அரசுப் பேருந்து மீது ஆட்டோ எதிா்பாராத விதமாக மோதியது. விபத்தில் பெங்களூருவை சோ்ந்த சுந்தரவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த காட்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த விபத்தில் சுந்தரவாசன் மனைவி சுமதி, ஆட்டோ ஓட்டுநா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரையும் மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.