சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?
வேலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்
வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்வுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். இந்த வட்டத்தில் மே 21 முதல் 27-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
மேலும், அணைக்கட்டு வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் 28-ஆம் தேதி வரையும், வேலூா் வட்டத்தில் வேலூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் 27-ஆம் தேதி வரையும், போ்ணாம்பட்டு வட்டத்தில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மே 21, 22 ஆகிய தேதிகளிலும், காட்பாடி வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தலைமையில் 27-ஆம் தேதி வரையும், கே.வி.குப்பம் வட்டத்தில் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் 23-ஆம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
ஜமாபந்தியின்போது அந்தந்த வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனுக்கள் அளித்தனா். மேலும் கிராமங்களில் உள்ள நில ஆவணங்கள், வருவாய் கணக்குகளும் சரிபாா்க்கப் பட்டன. இதில், அந்தந்த வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.