பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறப்பு!
கா்நாடக மது பாக்கெட்டுகள் கடத்தியவா் கைது
போ்ணாம்பட்டு அருகே 1,800 கா்நாடக மாநில மது பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த வி.கோட்டா சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.2- லட்சம் மதிப்புள்ள 1,800- கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து காருடன், மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், போ்ணாம்பட்டைச் சோ்ந்த காா் ஓட்டுநா் பயாஸ் அகமதுவை கைது செய்தனா். காரில் இருந்து தப்பியோடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சந்தோஷ் குமாரை தேடி வருகின்றனா்.