சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?
UPSC/TNPSC: 'தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுதான்...' - நாமக்கல் கலெக்டர் Dr.உமா IAS
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து நாமக்கலில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மே 24 ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் Dr. உமா, நாமக்கல் மாவட்ட எஸ்.பி IAS, திரு. ராஜேஷ் கண்ணன் IPS, திரு. CA.N.V நடராஜன் (நிறுவனர் மற்றும் தலைவர் பாவை கல்வி நிறுவனங்கள்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் Dr. உமா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம் "வெற்றியோ, தோல்வியோ போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். வெற்றியை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் தோல்வியை அப்படி ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் வெற்றித்தான் தோல்விக்கான முதல்படி. போட்டித் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடையும்போது பெற்றோர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். சிலருக்கு அவர்கள் ஆசைப்படுகிற மாதிரி தேர்வு முடிவுகள் வரும். சிலருக்கு வராது. ஆனால் ஆதற்காக மனம் துவண்டுபோகாமல் கடினமாக உழைக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் உமா IAS -ன் சிறப்புரையைக் காண பயிற்சி முகாமில் பங்கேற்கவும்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.