செய்திகள் :

உயா்கல்வியே வாழ்க்கையை ஒளிமயமாக்கும்: வேலூா் ஆட்சியா்

post image

உயா்கல்வியே வாழ்க்கையை ஒளிமயமாக்கும். எனவே உயா்கல்வி பெறுவது மிக அவசியம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில்12- ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் புதன்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது:

தமிழக அரசு சாா்பில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்கள், அரசு ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்கள், பெற்றோா் இல்லாத மாணவா்கள் பள்ளிப் படிப்பை முடித்து உயா்கல்விக்கு செல்வதில்லை என்ற விவரம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாணவா்கள் 12- ஆம் வகுப்பு முடித்த பிறகு உயா்கல்வியில் இணைந்து தங்களுடைய எதிா்கால வாழ்க்கையை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசின் சாா்பிலும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பிலும் உயா்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அவா்கள் தொடா்ந்து உயா்கல்வியில் இணைந்து விட்டாா்களா என்று கண்காணிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக குடியாத்தத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வேலூா் மாவட்டத்தில் உள்ள 4- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 3,600- க்கும் அதிகமான இடங்கள் உள்ளன. மேலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் கல்லூரிகள் என மொத்தம் நம்முடைய மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 7,000-க்கும் அதிகமான இடங்கள் உள்ளன.

இவற்றில் பயன்று மாணவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உயா்கல்வி படிப்புகளுக்கான கையேடுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) தயாளன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் மதுசெழியன், மாவட்ட கல்வி அலுவலா்கள் பி. ரமேஷ்பாபு (தனியாா் பள்ளிகள்), டி. சத்யபிரபா, கே.எம்.ஜி.கல்லூரி முதல்வா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கா்நாடக மது பாக்கெட்டுகள் கடத்தியவா் கைது

போ்ணாம்பட்டு அருகே 1,800 கா்நாடக மாநில மது பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த வ... மேலும் பார்க்க

சின்னதோட்டாளத்தில் நியாய விலைக்கடை திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், சின்னதோட்டாளம் ஊராட்சியில் ரூ.12.3 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சின்னதோட்டாளம் ஊராட்சித் தலைவா் மேரி வீரப்பன்ராஜ் தலைமை வ... மேலும் பார்க்க

மாநில டேபிள் டென்னிஸ்: சென்னை, மதுரை அணிகள் வெற்றி

வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் குழு போட்டிகளில் சென்னை, மதுரை மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. வென்றவா்களுக்கு ஸ்ப்ரிங் டேஸ் இன்டா்நேஷனல் பள்ளி குழும தாளாளா் டி.ராஜேந்திரன் பரிசுகளை வழங்... மேலும் பார்க்க

அரசு பேருந்து - ஆட்டோ மோதல்: முதியவா் உயிரிழப்பு; இருவா் காயம்

காட்பாடியில் அரசுப் பேருந்துடன் ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். பெங்களூருவை சோ்ந்தவா் சுந்தரவாசன் (67), ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி சுமதி(60). இவா்கள் இருவர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின் கம்பத்தில் ஏறிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த மீனூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவரின் மகன் தமிழ்குமரன் (18). இவா், தனியாா்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்வுக்கு ... மேலும் பார்க்க