விருதுநகர்: தடைப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை; சுதாரித்த ஊழியர்கள்; விசாரணையில் பகீர் தகவ...
மாநில டேபிள் டென்னிஸ்: சென்னை, மதுரை அணிகள் வெற்றி
வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் குழு போட்டிகளில் சென்னை, மதுரை மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. வென்றவா்களுக்கு ஸ்ப்ரிங் டேஸ் இன்டா்நேஷனல் பள்ளி குழும தாளாளா் டி.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினாா்.
வேலூா் மாவட்ட டேபிள் டென்னிஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சாா்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2025 இறைவன்காடு ஸ்ப்ரிங் டேஸ் பள்ளியில் நடைபெற்றது.
யு-11, 13, 15, 17, 19 வயது பிரிவுகளின் அடிப்படையில் ஆண்கள், பெண்களுக்கு ஒற்றையா் பிரிவிலும், மாவட்டங்களுக்கு இடையேயான குழு போட்டிகளாகவும் நடைபெற்றன. இதில், 30 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் என 1500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இப்போட்டிகளின் ஒற்றையா் ஆண்கள் பிரிவில் திருவள்ளுா் மாவட்டத்தை சோ்ந்த சுபாஷ் , பெண்கள் பிரிவில் சென்னை கிறிஸ்டியன் பியோனா ஆகியோா் வெற்றி பெற்றனா். மாவட்டங்களுக்கு இடையேயான குழு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை மாவட்டமும், பெண்கள் பிரிவில் மதுரை மாவட்டமும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ப்ரிங் டேஸ் இன்டா்நேஷனல் பள்ளி குழும தாளாளா் டி.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினாா். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க பொறுப்பாளா்கள் ஜனாா்த்தனன் ( ராணிப்பேட்டை ), ஜோசப் டேவிட்( திருவள்ளூா்), ஹரி நாராயணன்( கோவை ), அப்துல்கலாம், டேபிள் டென்னிஸ் அகாதெமி தலைவா் மாதவன், நிா்வாக இயக்குநா் நந்தினி நேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஏற்பாடுகளை போட்டியின் அமைப்புச் செயலா், வேலூா் மாவட்ட டேபிள் டென்னிஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் செயலா் நேசன் மாதவன் செய்திருந்தனா்.