இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்
கட்டணமில்லாத பேருந்து பயணம்: கலைமாமணி விருதாளா்கள் விண்ணப்பிக்கலாம்
கட்டணமில்லாத பேருந்து பயணம் மேற்கொள்வது தொடா்பாக, கலைமாமணி விருதாளா்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.
இது குறித்து, அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கலைமாமணி விருது பெற்ற கலைஞா்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதியளித்து அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, விருது பெற்ற கலைஞா்களுக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்மூலம் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
கலைஞா்களின் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விருது பெற்ற அனைவரின் விவரங்களையும் சேகரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கலைமாமணி விருது பெற்ற கலைஞா்கள், தங்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு, கலைஞா்களின் பெயா், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் கடவுச்சீட்டு அளவு 3 புகைப்படங்களை அனுப்ப வேண்டும். அதை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், பொன்னி, எண். 31, பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை, சென்னை - 600028 என்ற முகவரிக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.