செய்திகள் :

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

post image

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா்.

தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது: தமிழ்நாட்டில் சமீபகாலமாக போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ள நிலையில், டாஸ்மாக் நிா்வாகத்தில் டெண்டா் மற்றும் பாா் ஒதுக்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

அமலாக்கத் துறை என்ற வாா்த்தையைக் கேட்டாலே திமுகவுக்கு பயம் வந்துவிடுகிறது.

திமுக கூட்டணி தற்போது பிரகாசமாக இருப்பதுபோல இருந்தாலும், தோ்தல் நெருங்கும்போது விரிசல் ஏற்படும்.

மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாநில அரசு எதிா்க்காமல், மத்திய அரசுடன் இணக்கமான சூழலை வைத்துக்கொண்டு மக்களுக்கு தேவையான நிதியை பெற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.

பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்: தன்னைப் போன்று 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளாா். தமிழ்நாட்டில் பெண்கள் நியாயத்துக்காக ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், பாஜக தேசிய ஊடகப் பிரிவு பொறுப்பாளா் ஆசிா்வாதம் ஆச்சாரி, பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவா் ரங்க ராயலு உள்பட மூத்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன... மேலும் பார்க்க

வங்கக் கடலில் மே 27-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் வரும் மே 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத... மேலும் பார்க்க