செய்திகள் :

மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு அரசு மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரையில் அரசகுழி மயானத்துக்குச் செல்லும் வழியில் வைகை ஆற்றை ஒட்டி அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளராக உள்ள கணேசன் புதன்கிழமை இரவு பணி முடிந்து கடையைப் பூட்டி விட்டுச் சென்றாா். நள்ளிரவில் அங்கு வந்த மா்ம நபா் மதுக் கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாா். இதில் கடையிலிருந்த ரூ.22 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் தீயில் எரிந்து சேதமாயின.

இகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை தீயணைப்புத் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

இதையடுத்து, மானாமதுரை காவல் ஆய்வாளா் ரவீந்திரன், காவல் உதவி ஆய்வாளா் குகன், போலீஸாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் மதுக் கடைக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுக் கடைக்கு தீ வைத்ததாக இளையான்குடி அருகேயுள்ள சாலைக் கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மகன் கௌதமை (30) கைது செய்தனா்.

இவா் மீது ஏற்கெனவே பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலையில் உள்ளன. மதுக் கடைக்கு திருட வந்த கௌதம் அங்கு பணப் பெட்டியில் ரூ.3,500 மட்டுமே இருந்ததால், ஆத்திரமடைந்து கடைக்குத் தீ வைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திருப்புவனம் உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெகதீஸ்வரன் (34). திருமணமாகாத ... மேலும் பார்க்க

நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை எட்டிய இந்தியா! - ஆளுநா் ஆா்.என்.ரவி

நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை இந்தியா எட்டியுள்ளதாக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஸ்ரீசேவுகமூா்த்தி கோசாலை அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா வியாழக்கி... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நிகழ்ந்த கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். சிங்கம்புணரி எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

சிவகங்கையில் புறவழிச் சாலைப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு

சிவகங்கை புறவழிச் சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பணிகளை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன... மேலும் பார்க்க

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: மேலும் ஒருவரது உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இவா்களில் 4 பேரின் உடல்கள் உடனே மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10.50 லட்சம் நிவாரணம்

சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10.50 லட்சத்துக்கான நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் தனியாா... மேலும் பார்க்க