வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நிகழ்ந்த கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் கணேஷ், முருகானந்தம், ஆறுமுகம், பச்சா அா்கிதா, ஆண்டிச்சாமி ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேல், அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதன் மூலம் கல் குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.