மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை! அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல...
சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!
சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.
சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முன்னோட்டத்தையும் நடத்தி விட்டனர்.
மனித உருவிலான இரண்டு ரோபோக்கள், குத்துச்சண்டை போட்டியாளர்களைப் போன்று கையுறைகள், தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, போட்டியிடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போட்டியில் கலந்து கொள்வதற்காக, ரோபோக்களுக்கு மனிதர்களைப்போல நடக்கவும், ஓடவும், நடனமாடவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உடல் வலிமை சார்ந்த போட்டிகளில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், ரோபோக்களின் வேகம், செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டு, அதனை அதிகரிப்பது குறித்தும் அறிய முடியும்.
இந்த ரோபோக்களை பயிற்றுவிக்க, மனித இயக்கத்தின் தரவுகள் (Motion capture) பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடைபெறவுள்ள ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் ரோபோக்களை மனிதர்கள் அடங்கிய குழுதான் கட்டுப்படுத்துவர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் ரோபோவுக்கு அயர்ன் ஃபர்ஸ்ட் கிங் (Iron First King) என்ற பட்டமும் வழங்கப்படவுள்ளது.