பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்
தில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னா் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைகிறாா்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை 9.50 மணியளவில் தில்லி புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் தில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
நாளை(மே.23) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவேளையின் போது பிரதமரை சந்திக்க முதல்வர் நேரம் கேட்டுள்ளார்.