வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்த...
இனி ’மைசூர் பாக்’ இல்ல, 'மைசூர் ஸ்ரீ'.... இனிப்புகளின் பெயரிலிருந்து ’பாக்’ என்ற சொல் நீக்கம்
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வந்த பதற்றங்களை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது பதட்டமான சூழல் தணிந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கடையில் மைசூர் பாக், என்ற இனிப்பின் பேரில் இருக்கும் பாக் என்ற சொல்லை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்ரீ என பெயர் மாற்றியுள்ளனர்.

இது குறித்து இனிப்பு கடையின் உரிமையாளர் கூறியதாவது "எங்கள் இனிப்புப் பண்டங்களின் பெயர்களில் இருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டோம். 'மோதி பாக்' என்பதை 'மோதி ஸ்ரீ' என்றும், 'கோண்ட் பாக்' என்பதை 'கோண்ட் ஸ்ரீ' என்றும், 'மைசூர் பாக்' என்பதை 'மைசூர் ஸ்ரீ' என்றும் பெயர் மாற்றியுள்ளோம்," என்று என்டிடிவிக்கு கடை உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இனிப்புகளில் உள்ள ”பாக்” என்ற சொல் பாகிஸ்தானை குறிக்கவில்லை மாறாக அந்த இனிப்புகளின் செயல்முறையில் பயன்படுத்தப்படும் சர்க்கரை பாகை குறிப்பதாக என்டிடிவி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல பேக்கரி கடையான `கராச்சி பேக்கரி' கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கப்பட்டது. பாகிஸ்தானின் பெயர் இருந்ததாலேயே இந்த கடை தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் கராச்சி பேக்கரி தரப்பில் "இது நூறு சதவிகிதம் இந்திய பிராண்ட், 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் நிறுவப்பட்டது. இது இந்தியாவுக்காக இந்திய மக்களுக்காக அன்புடன் சேவை செய்யும் ஒரு இந்திய பிராண்ட்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.