செய்திகள் :

Chhonzin Angmo: எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் 'பார்வை சவால்' கொண்ட இந்தியப் பெண்!

post image

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான பார்வை சவால் கொண்ட சோன்சின் அங்மோ, மனஉறுதியோடு எவரெஸ்ட்டில் ஏறி இந்தியாவின் மூவர்ணக்கொடியை அதன் சிகரத்தில் நட்டுள்ளார். 'எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பார்வை சவால் கொண்ட இந்தியப் பெண்' என்ற வரலாற்று சாதனையும் இவர் படைத்துள்ளார்.

சோன்சின் 3 வயது முதல் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில், 8 வயது சிறுமியாக இருந்தபோது பார்வையை முற்றிலும் இழந்திருக்கிறார். மருந்து ஒவ்வாமைக் காரணமாக சோன்சின் பார்வை இழந்ததாக சொல்லப்படுகிறது. பார்வை சவால் கொண்டவர்களுக்கான பள்ளியில் சேர்ந்து பயின்ற சோன்சின், தொடர்ந்து பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். 2016-ல் இருந்து மணாலியிலுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற விளையாட்டு நிறுவனத்தில் சேர்ந்து மலையேறுவதற்குப் பயில தொடங்கினார்.

Chhonzin Angmo
Chhonzin Angmo

சோன்சின் லடாக்கிலுள்ள பல சிகரங்களில் ஏறியுள்ளார். 2021-ம் ஆண்டில், ஆயுதப்படை வீரர்கள் டீம் தலைமையில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடமில் மாற்றுத்திறனாளிகளோடு இணைந்து சியாச்சின் பனிப்பாறைக்கு சென்றார். ஒவ்வொரு மலை ஏறுதலின்போதும் தன்னுடைய ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்ததாக சோன்சின் குறிப்பிடுகிறார்.

சில தினங்களுக்கு முன்னால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் சோன்சின். எவரெஸ்ட் சிகரத்திலுள்ள முகாம் ஒன்றிலிருந்து (6065 மீட்டர்) முகாம் இரண்டுவரை (6400 மீட்டர்) செல்ல பழக்கப்படுத்துதல் பயிற்சி தொடங்குவதற்கு முன்பே, முதலில் மவுண்ட் லோபுச்சே சிகரத்தை (6119 மீட்டர்) ஏறிய சோன்சின், பின், முகாம் மூன்று (7200 மீட்டர்) மற்றும் முகாம் நான்கிற்கும் (7920 மீட்டர்) முன்னேறியிருக்கிறார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய என் சகோதரி அந்த சந்திரனையே அடைந்தது போல உணர்கிறேன்

எவரெஸ்ட் சிகரம் தொட்டதுக் குறித்து பேசிய சோன்சின், "எவரெஸ்ட் சிகரத்தில் காலடி எடுத்து வைத்தது முதல் மாற்றுத்திறனாளிகள் மனதில் மனஉறுதி விதைப்பதையே என் கனவாக கொண்டேன்; இது அதற்கான முதல்படி மட்டுமே. நம் மனதில் உறுதி இருந்தால், நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட இயலாது. என்னுடைய அடுத்த இலக்கு ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஏறுவதே.

எனது பார்வைக்குறைபாடு குறித்து மக்கள் என்னைக் கேலி செய்தபோதும், என் தந்தை மற்றும் எனது குடும்பத்தினர்கள் என்னை ஆதரித்து என் மனதை திடமாக்கினர். நானோ, என் குடும்பத்தினரோ சோர்வடைந்திருந்தால், வாழ்க்கையில் ஒரு படிகூட முன்னேறியிருக்க முடியாது" எனக் கூறினார்.

Chhonzin Angmo
Chhonzin Angmo

தன் மகளின் வெற்றி குறித்து மனமகிழ்ந்த அமர் சந்த், "எங்கள் மகள்தான் எங்கள் உலகத்தின் சோலை. அவள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது எங்கள் கிராமத்திற்கு கிடைத்த வெற்றி'' என மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். சோன்சினின் வெற்றி பற்றி அவர் தங்கை பேசுகையில், "எங்கள் கிராமத்திற்கு மேலே உள்ள மஞ்சள் மலைகளை நாங்கள் 'மூன்லேண்ட்' என அழைப்போம். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய என் சகோதரி அந்த சந்திரனையே அடைந்தது போல உணர்கிறேன்" என நெகிழ்ந்திருக்கிறார்.

சோன்சின் அங்மோவின் இந்த சாதனை, மனதில் உறுதி இருந்தால் எந்த சாதனையையும் சாத்தியமாக்க இயலும் என்றே எடுத்துரைக்கிறது!

`நீயும் நானும் வேற இல்லடா' - இந்து ஜோடியின் திருமணத்திற்கு இடம்கொடுத்த முஸ்லிம் குடும்பம்

புனேயில் உள்ள வன்வோரி என்ற இடத்தில் திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்ருதி மற்றும் நரேந்திரா தம்பதிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்த ஹாலில் முஸ்லிம் திருமண ஜோடிக்கு திருமண வரவ... மேலும் பார்க்க

இனி ’மைசூர் பாக்’ இல்ல, 'மைசூர் ஸ்ரீ'.... இனிப்புகளின் பெயரிலிருந்து ’பாக்’ என்ற சொல் நீக்கம்

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வந்த பதற்றங்களை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இரு நாடுகள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெ... மேலும் பார்க்க

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க