Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் தெப்ப உற்சவம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாள் விழாவான தேரோட்டம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது.

விழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அதிகாலையில் புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும், மாலையில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து இரவு 11 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் நகரத்தாா்கள், நாட்டாா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.