4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!
அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, தென்காசி, குமரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தென்காசி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்
கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இன்று மழை பெய்து வருகிறது.
