கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் சிலை: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அன்சுல் மிஸ்ரா ஐஏஎஸ்-க்கு ஒரு மாதம் சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்தாததால் திருப்பி வழங்க உத்தரவிட்டும் வழங்கவில்லை, குறித்த காலத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகள் கடமை செய்யாததால் மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை பல வழக்குகளில் உள்ளன.
அரசு அதிகாரிகள் உயரதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்திற்கும் பதில் சொல்லி ஆக வேண்டும் எனக் கூறிய நீதிபதி வேல்முருகன், அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?
அத்துடன் வழக்கில் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மூன்று வாரங்களில் இழப்பீடு தொகையை வழங்காவிட்டால் மேலும் 10 நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.