செய்திகள் :

மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை! அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

post image

தமிழக மின்சாரத்துறையின் கொள்கை மற்றும் பரிந்துரைகளைச் செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தினார்.

பெங்களூரில் இன்று (மே 23) மத்திய அரசின் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் தென் மாநிலங்களின் மின்சாரத்துறை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மாநாட்டில் அவர் வலியுறுத்தியதாவது,

எதிர்காலச் சவால்கள் மற்றும் தீர்வுகள்

அதிவேகமான மின் தேவை வளர்ச்சி, கரியமில வாயு உமிழ்வுகள் குறித்த அதிகரித்து வரும் சிக்கல்கள் மற்றும் புதிய எரிசக்தி மூலங்களில் நிகழும் தொடர்ச்சியான தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியன, நமது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பின் எதிர்காலத்திற்குப் பெரும் சவால்களை முன்வைக்கின்றன.

பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கும், மின் தொகுப்பினை கரியமிலத் தாக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் (Decarbonisation), இத்துறையில் மிகப்பெரும் அளவிலான முதலீடுகள் இன்றியமையாததாகின்றன.

மதிப்பீடுகளின்படி, எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில், மின் உற்பத்தி, மின் செலுத்துகை, மின் சேமிப்பு மற்றும் மின் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான மதிப்புச் சங்கிலியிலும் சுமார் ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் அவசியமாகின்றன. இவ்வகையில், மின் பகிர்மான நிறுவனங்களின் (Discoms) நிதிநிலையைச் சீரமைத்து, அவற்றின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் முனைப்பானதும் ஒருமுகப்படுத்தப்பட்டதுமான ஒருங்கிணைந்த பேராதரவு அவசியமாகிறது.

மின் பகிர்மான நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கென ஒரு முழுமையான, விரிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தினை மாநிலங்கள் முழுமனதுடன் ஏற்றுச் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் பொருட்டு, கடன் பொறுப்பினை ஏற்கும் சுமையை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சமஅளவில் பகிர்ந்தளிக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

மேலும், மின் பகிர்மான நிறுவனங்களின் நிதிப் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் கடன் சுமை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், இத்திட்டமானது உறுதியான நிதிச் சீர்திருத்தங்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

முக்கிய கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த பரிந்துரைகள்

  • ஊரக மின்மயமாக்கல் கழகம் (REC) மற்றும் மின் நிதி கழகம் (PFC) ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை விழுக்காடு (1.5%) அளவிற்கு குறைக்கப்பட வேண்டும். இந்த ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் பெற்றுவரும் மிகை ஊதிய வரம்பானது (High Spread), இத்துறையின் ஒட்டுமொத்தக் கடன் தாங்குதிறனையும் (Debt Sustainability) நேரடியாகப் பாதிக்கின்றது.

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மேம்பட்ட செயலாக்கத் திறனையும் வணிக நம்பகத்தன்மையையும் (Improved Viability) கருத்தில்கொண்டு, சில மாநிலங்களின் மீது மட்டும் சமமற்ற நிதிப்பொறுப்பு சுமத்தப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மின்செலுத்தமைப்புக் கட்டணங்களிலிருந்து (Transmission Charges) அளிக்கப்பட்டுவரும் விலக்கினைத் திரும்பப் பெற வேண்டும்.

  • ராய்கர் - புகளூர் - திருச்சூர் உயர் மின்னழுத்த நேர்திசை மின் தொடரமைப்பானது (HVDC Transmission System), தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு, அதற்கான கட்டண விகிதங்கள் அதற்கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும்.

  • மாநிலங்களுக்கிடையேயான மின்செலுத்தமைப்புக் கட்டணங்கள் (Inter-State Transmission Charges), `பயன்படுத்துவோர் செலுத்தும்’ (User Pays) எனும் கொள்கையின் அடிப்படையில், உண்மையான பயன்பாட்டு அளவின்படி விதிக்கப்பட வேண்டும்.

  • மின் தேவைக்கான வளத்திட்டமிடலைப் பொறுத்தவரையில் (Resource Adequacy Planning), மதிப்பிடப்பட்ட மின்தேவையை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நீண்டகால மற்றும் நடுத்தரகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் விகிதாச்சாரத்தை வரையறுக்காமல், அந்தந்த

  • மின் பயன்பாட்டு நிறுவனங்கள், தங்களின் தனிப்பட்ட மின்சுமைப் போக்கு (Load Pattern) மற்றும் எதிர்காலத் தேவைக் கணிப்புகளின் அடிப்படையில், உகந்த முறையில் திட்டமிட்டுக் கொள்வதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

  • புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகள் (Renewable Purchase Obligations - RPO), ஒவ்வொரு குறிப்பிட்ட எரிசக்தி ஆதாரங்களின் அடிப்படையிலும் வரையறுக்கப்படாமல், மாநிலங்கள், தங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதும், தங்களின் பிராந்திய சூழலுக்கு மிகவும் உகந்ததுமான எரிசக்தி ஆதாரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தமிழக மின்வாரியத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக: தலைவா் விஜய் புகழாரம்

போருக்குச் செல்லும் முன்பே தனது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா், வாகை மலா் சூடி போருக்குச் சென்றதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் புகழாரம் சூட்டினாா். மன்னா் பெரும்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் மே 26-இல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக மே 26-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க

ஆா்டிஐ சட்டத்தின்கீழ் பதில் தராத ஊராட்சி செயலருக்கு அபராதம் தகவல் ஆணையா் நடவடிக்கை

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ், உரிய காலத்துக்குள் பதில் தராத கிராம ஊராட்சி செயலருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம் சந்திராபுரம் ஊரா... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை தாமதமாவது தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லாததால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 25, 26) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க