செய்திகள் :

Copyright: "ஒரு பாட்டுக்கு 2 லட்சம்; ஆனா ஒரு ரூபாய்கூட எனக்கு வரல" - ஆர்.கே.செல்வமணி சொல்வது என்ன?

post image

டி.ஆர்.பாலா இயக்கத்தில், 'பிக் பாஸ்' வெற்றியாளர் முகேன் ராவ் மற்றும் 'ஜோ' திரைப்படப் புகழ் பாவ்யா திரிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஜின்'.

பாலசரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.மே 30 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே 23) நடைபெற்றது.

'ஜின்’ இசைவெளியீட்டு விழா
'ஜின்’ இசைவெளியீட்டு விழா

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாகக் கதையைக் கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்கத் தொடங்கியதால்தான் சினிமா சீரழிகிறது.

இதனால், திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு நாயகனுக்கும், நாயகிக்கும், இயக்குநருக்கும் இடையே புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போது அந்தப் படம் தோல்வியைத் தழுவுகிறது,” என்று கூறினார்.

“இதை என் படத்தை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன். இன்றைய தேதியில், ஒரு நாளைக்குத் திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

இதன் மூலம், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலமாகத்தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கிறதா என்றால், இல்லை.

படம் வெற்றி பெறவில்லை என்றால், தயாரிப்பாளருக்கு மட்டுமே நஷ்டம் ஏற்படுகிறது,” என்று கூறினார்.

ஆர். கே. செல்வமணி
ஆர். கே. செல்வமணி

“நான் இயக்கி, தயாரித்த படத்தில் உள்ள பாடலை இன்று மேடையில் பாடினால், இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி லட்சங்களை யார் யாரோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு ரூபாய்கூட என்னை வந்து சேரவில்லை. இதுபோன்ற பிரச்னைகளைச் சரி செய்தால், தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.என்னுடைய

ஆகவே, தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Tourist Family: `எப்படி விவரிப்பது; நன்றியுணர்வில் அழுகிறேன்..'- சூர்யா சந்திப்பு பற்றி இயக்குநர்!

சசிக்குமார் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள 25 வயதேயான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெ... மேலும் பார்க்க

ஆகக்கடவன விமர்சனம்: பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்; புதுமுகங்களின் முயற்சி எப்படி?

மூன்று நண்பர்கள் ஒரு மெடிக்கல் கடையில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்... மேலும் பார்க்க

Trisha: 'கமல் சார் என்னுடைய வழிகாட்டி, மணி சார்...'- பணியாற்றிய அனுபவம் குறித்து த்ரிஷா

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தி... மேலும் பார்க்க

Ace Review: மலேசியாவில் ரகளை செய்யும் விஜய் சேதுபதி - யோகி பாபு; இந்த ஆட்டம் எப்படி?

தனது குற்றப் பின்னணியை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). அங்கே, தொழிலதிபராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் யோகி பாபு (அறிவு) அவரைத் தனது நண்பனின் உறவினராக அ... மேலும் பார்க்க