செய்திகள் :

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெண் பிரின்சிபால்

post image

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்த நபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு இறந்து கிடந்தவர் அணிந்திருந்த சட்டை மூலம் கொலை செய்யப்பட்டவர் பெயர் சாந்தனு தேஷ்முக் என்று தெரிய வந்தது.

சாந்தனு யவத்மாலில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியது தெரிய வந்தது. அதே பள்ளியில் சாந்தனுவின் மனைவி நிதி தேஷ்முக் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். விசாரணையில் இருவரும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். பெற்றோர் ஆதரவு இல்லாமல் தனியாக வசித்து வந்தனர்.

அதிர்ச்சி தந்த கொலை வழக்கு

போலீஸார் கொலை செய்யப்பட்ட சாந்தனுவின் நண்பர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரித்தனர். விசாரணையில் சாந்தனு மனைவி நிதி தேஷ்முக் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நிதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தனது கணவனை கொலை செய்ததை நிதி ஒப்புக்கொண்டார். நிதியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தது.

சாந்தனுவும், நிதியும் காதலித்து திருமணம் செய்த புதிதில் நன்றாகவே வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு சாந்தனு மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரின் சித்ரவதை தாங்க முடியாமல் சாந்தனுவை கொலை செய்ய நிதி முடிவு செய்துள்ளார். சாந்தனுவை கொலை செய்ய ஆன்லைனில் மருந்தை தேடி அதனை உள்ளூரில் வாங்கி அதனை வைட்டமீன் மாத்திரை என்று கூறி தனது கணவனை சாப்பிட செய்துள்ளார். அதனை விஷம் என்று அறியாமல் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சாந்தனு இறந்து போனார்.

உதவிய மாணவர்கள்?

இதையடுத்து உடலை அப்புறப்படுத்த என்ன செய்வது என்று நிதி தேஷ்முக் ஆலோசித்தார்.  நிதி தேஷ்முக் தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு டியூசன் நடத்தி வந்தார். அவர்களில் மூன்று பேருக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தார். அவர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி உடலை அப்புறப்படுத்த உதவும் படி கேட்டுக்கிண்டார். அவர்களும் ஆசிரியை உதவி கேட்டதால் தட்ட முடியாமல் உடலை அப்புறப்படுத்த உதவ சம்மதித்தனர். இதையடுத்து சாந்தனுவின் உடலை நான்கு பேரும் வாகனம் ஒன்றில் ஏற்றி செளசாலா வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று போட்டுவிட்டு வந்திருந்தனர்.

கைது

அடுத்த நாள் நிதி தேஷ்முக் மட்டும் மீண்டும் உடலை போட்ட இடத்திற்கு சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு வந்திருப்பது தெரிய வந்தது. அப்படியே விட்டால் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று கண்டுபிடித்துவிடுவார்கள் என்று கருதி உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீஸ் விசாரணையில் நிதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நிதி கைது செய்யப்பட்டார். உடலை அப்புறப்படுத்த உதவிய மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு திட்டமிட்டு கணவனை மனைவி கொலை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க

``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்ன நடந்தது?

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒ... மேலும் பார்க்க