அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.
இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் மருத்துவமனையில் தங்கி வேதியராஜைக் கவனித்து வந்துள்ளனர்.

திருமணமாகாத இருபது வயது லாரா, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும் அவரது தாயும் சென்றனர்.
அப்போது, லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியே நின்றுள்ளார்.
இதையடுத்து, கர்ப்பிணியாக இருந்த லாரா, கழிவறைக்குள் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டார்.
சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு லாராவிற்கு குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு, லாரா செய்ததும், அவரது தாய் உடந்தையாக இருந்ததும் கொடூரத்தின் உச்சம்.
பிறந்த பச்சிளங்குழந்தையைத் தலைகீழாகத் தூக்கி, தலையைக் கழிவறைக்குள் திணித்து அழுத்தி, லாரா கொலை செய்துள்ளார். ஆனால், கால்கள் மட்டும் உள்ளே செல்லாமல் டாய்லெட்டில் நீட்டிக் கொண்டிருந்தன.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் அங்கு வந்ததும், எதுவும் நடக்காதது போல் லாராவும் அவரது தாயும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
டாய்லெட்டைப் பார்த்த தூய்மைப் பணியாளர் அதிர்ச்சியடைந்து, மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, அரியலூர் நகரப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, டாய்லெட்டை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியே எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, தப்பிச் செல்ல முயன்ற லாராவை போலீசார் கைது செய்தனர். தற்போது லாராவுக்கு அரியலூர் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிரசவ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனை போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.லாரா கர்ப்பமாவதற்குக் காரணம் யார், பச்சிளங்குழந்தையைக் கொலை செய்வதற்குக் காரணம் என்ன என்று பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அரியலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs