வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!
ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்தது!
நேற்று சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை இன்று(மே 23) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,897 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 717.21 புள்ளிகள் அதிகரித்து 81,669.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.70 புள்ளிகள் உயர்ந்து 24,834.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறைசார் குறியீடுகளில், நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 1 சதவீதம் உயர்ந்துள்ளது. நிஃப்டி ஐடி, ரியால்டி முறையே 0.9 சதவீதம், 0.7 சதவீதம் உயர்ந்துள்ளன. நிஃப்டி மெட்டல், பிஎஸ்யு வங்கி தலா 0.5 சதவீதம் உயர்ந்தன. அதேநேரத்தில் நிஃப்டி பார்மா (0.9%), நிஃப்டி நுகர்வோர் துறை (0.1%) சரிந்தது.
எட்டர்னல், ஐடிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பவர் கிரிட், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வரும் நிலையில், சன் பார்மா, மாருதி சுசுகி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.