ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை! ரூ. 3 லட்சம் கோடி லாபம்!!
மூன்று நாள் சரிவுக்குப் பின்னர், பங்குச்சந்தை இன்று(மே 21) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,327.61 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே ஏற்றம் கண்டு வந்தது. காலை 800 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், வர்த்தக நேர முடிவில் 410.20 புள்ளிகள் அதிகரித்து 81,596.63 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இறுதியில் 129.55 புள்ளிகள் உயர்ந்து 24,813.45 புள்ளிகளில் இருந்தபோது வர்த்தகம் நிறைவு பெற்றது.
துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, பார்மா, ரியால்டி, ஐடி, நிதி துறைகள் உயர்ந்தன.
பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், சன் பார்மா, டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, நெஸ்லே, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க | ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி