செய்திகள் :

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

post image

பங்குச்சந்தை இன்று(மே 21) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,327.61 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.40 மணியளவில், சென்செக்ஸ் 602.82 புள்ளிகள் அதிகரித்து 81,789.26 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 193.15 புள்ளிகள் உயர்ந்து 24,877.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி, பார்மா, ரியால்டி துறைகள் 1.5% வரை உயர்ந்தன. அதேநேரத்தில் நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் 0.7% வரை சரிந்தன.

நெஸ்லே, ஹெச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

எடர்னல், இண்டஸ்இண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

இதையும் படிக்க | காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாமா? குறட்டை நல்லதா? - நம்பிக்கையும் உண்மையும்!

ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை! ரூ. 3 லட்சம் கோடி லாபம்!!

மூன்று நாள் சரிவுக்குப் பின்னர், பங்குச்சந்தை இன்று(மே 21) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,327.61 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் ஆரம்பம் மு... மேலும் பார்க்க

எப்படி இருக்கிறது புதிய டொயோடா எஸ்யுவி? ரூ.25 லட்சத்தில் அறிமுகம்!

உலகம் முழுவதும் டொயோடா என்றாலே, மிகவும் நம்பகமான பிராண்ட் என்று பெயர் பெற்றுவிட்டது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக புதிய 6-வது தலைமுறை ரேவ்4 மாடல் டொயோடா எஸ்யுவி அறிமுகமாகியிருக்கிறது. இன்று உலகம் முழுவத... மேலும் பார்க்க

ஆக்சஸ் ரைடு கனெக்ட் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்த சுசூகி!

சுசூகி மோட்டர்சைக்கிள் நிறுவனம், ஆக்சஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டான ரைடு கனெக்ட் டிஎஃப்டி-யை அறிமுகம் செய்துள்ளது. என்னென்ன சிறப்பம்சங்கள்..ப்ளூடூத், 4.2 அங்குல வண்ண டிஎஃப்டி டிஜிட்டல் திரை, இன்ஸ்ட... மேலும் பார்க்க

கையடக்கமான போட் ப்ளூடூத் ஸ்பீக்கர்!

பாக்கெட்டில் வைத்து எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் கையடக்கமான ப்ளூடூத் ஸ்பீக்கரை போட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.ஸ்பீக்கர், ஹெட்செட் போன்ற மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் முதன்மையான நிறுவனமாக போட... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு அதிரடியாக 21 காசுகள் சரிவு! ரூ. 85.63

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 85.63 காசுகளாக நிறைவு பெற்றது. மேலும் பார்க்க

கவாஸகி எலிமினேட்டருக்குப் போட்டியாக ஹோண்டா ரெபல்!

ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஹோண்டா ரெபல் 500 பைக்கை இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட குற... மேலும் பார்க்க