எப்படி இருக்கிறது புதிய டொயோடா எஸ்யுவி? ரூ.25 லட்சத்தில் அறிமுகம்!
உலகம் முழுவதும் டொயோடா என்றாலே, மிகவும் நம்பகமான பிராண்ட் என்று பெயர் பெற்றுவிட்டது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக புதிய 6-வது தலைமுறை ரேவ்4 மாடல் டொயோடா எஸ்யுவி அறிமுகமாகியிருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ரேவ்4 மாடல் கார் 2025ஆம் நிதியாண்டுக்குள் ஜப்பானில் விற்பனைக்குக் கொண்டு வர டொயோடோ இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரேவ்4 தனது பயணத்தை 1994ஆம் ஆண்டு தொடங்கியது. ஆஃப்-ரோடு வாகனமாகவும் அமைந்திருந்ததே இதன் சிறப்பு. அது முதல், ரேவ்4, உலகம் முழுவதும் கார் ஓட்டுநர்களின் விருப்பமான மாடலாக மாறி 5 ஜெனரேஷன்களைக் கடந்தது. தற்போது புதிய ஜெனரேஷனில் ரேவ்4 கார் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்ஸ்-உடன் வருகிறது. இதன் பவர் அவுட்புட் திறன் என்பது 181 பிஎச்பி மற்றும் 300 பிஎச்பி வரை உள்ளது.
ஜப்பான் நாட்டின் கார் உற்பத்தி நிறுவனமான டொயோடா, புதிய எஸ்யுவி வகைக் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சேடன் மற்றும் ஹேட்ச்பேக்ஸ் கார் வாங்க விரும்பும் பல தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நம்பகமான மற்றும் கொடுக்கும் காசுக்கு மதிப்பு கொடுக்கும் நிறுவனம் என்ற பெயரைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அதனை ஏற்கனவே பெற்றிருக்கும் டொயோடா, பல ஆண்டுகாலமாக நற்பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் புதிய டொயோடா எஸ்யுவி அறிமுகமாகவிருக்கிறது. டொயோடா ரேவ்4 - பவர்டிரெயின், டிசைன், மூன்று மாடல்கள், செய்யறவு தொழில்நுட்பத்துடன் அசத்தலாக அறிமுகமாகியிருக்கிறது.