KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
ஆக்சஸ் ரைடு கனெக்ட் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்த சுசூகி!
சுசூகி மோட்டர்சைக்கிள் நிறுவனம், ஆக்சஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டான ரைடு கனெக்ட் டிஎஃப்டி-யை அறிமுகம் செய்துள்ளது.
என்னென்ன சிறப்பம்சங்கள்..
ப்ளூடூத், 4.2 அங்குல வண்ண டிஎஃப்டி டிஜிட்டல் திரை, இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்.
இரவில் மட்டுமின்றி பகலிலும் இந்த டிஎஃப்டி திரையில் விவரங்களை எளிதாக பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளுடூத்துடன் மொபைல் போனை இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 125 சி.சி. சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 6.500 ஆர்பிஎம்மில் 6.2 கிலோவாட் பவரையும், 5 ஆயிரம் ஆர்பிஎம்மில் 10.2 என்.எம்.டார்கையும் வெளிப்படுத்தும். இந்த புதிய மாடலில் மெட்டாலிப் மேட் பிளாக், மெட்டாலிக் ட் ஸ்டெல்லர் புளூ, பியர்ல் கிரேஸ் ஒயிட், சாலிட் ஐஸ் கிரீன் ஆகிய 5 ஷேடுகளில் விற்பனையாகிறது. இதில் நேவிகேஷன் வசதியுடன் உண்டு. தற்போது புதியதாக பியர்ல் மேட் அக்வா சில்வர் நிறமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125 போன்ற வாகனங்களுக்கு மத்தியில் சுசூகி ஆக்சஸ் 125 புது வடிவில் போட்டியாக வெளியிட்டுள்ளது.
விலை என்ன?
ஷோரூம் விலை ரூ.1.02 லட்சம் ஆகும்.